மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொத்து விற்பதில் தகராறு.. தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்!
சென்னை மாதவரம் அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் - ரோஸ் தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு நரேஷ் குமார் மற்றும் விக்னேஷ் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிய நிலையில், தனித்தனியாக வசித்து ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.
இதில் பாஸ்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதனால் ரோஸ் மாதவரம் பாண்டியன் தெருவில் உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார். மேலும் அங்கிருந்தபடி தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள குடும்ப சொத்தை அதே பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்ய அண்ணன், தம்பி இருவரும் முடிவு செய்து அதற்கான முன்பணத்தையும் பெற்றுள்ளனர். இந்த பணத்தை பகிர்ந்து கொள்வதில் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை விக்னேஷ் குமார் அம்பேத்கரின் ஆட்டோவுடன் நின்றிருந்த போது, அங்கு வந்த நரேஷ் குமார் எனக்கு சொத்து விற்பனை செய்த பணத்தில் அதிகமாக தர வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அண்ணன் நரேஷ் குமார் இரும்பு கம்பியால் தம்பி விக்னேஷ் குமாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நரேஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் கொலை செய்யப்பட்ட விக்னேஷ் குமாருக்கு வாசுகி என்ற மனைவியும், 5 வயது மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.