அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனையும் ஒரே பாடலில்! ஓட்டுப் போடும் முன் ஒருமுறையாவது கண்டிப்பா பாருங்க
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலை மையப்படுத்தி இயக்குனர் கரு பழனியப்பனின் குழு தேர்தல் வருது தேர்தல் வருது ஜாக்கிரத…ஜனங்க ஜாக்கிரத…என்ற தேர்தல் பாடலை பாடியுள்ளனர். தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலுக்கு இமான் இசையமைத்துள்ளார். ரேஸ்மி சதீஷ் பாடலை பாடியுள்ளார். யுகபாரதி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.