எடப்பாடியாரா இது? கருப்பு கூலிங் க்ளாஸ்.. தொப்பி.! எம்.ஜி.ஆராக மாறிய எடப்பாடி பழனிசாமி..



eps-in-mgr-getup-viral-photos

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் வலம்வரும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைராலகிவருகிறது.

அதிமுக கட்சியின் பொது செயலாளர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அக்கட்சியில் முக்கிய புள்ளிகளிடையே அதிகார போட்டி நிலவிவருகிறது. சசிகலா மற்றும் தினகரன் இருவரும் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இருவரின் இரட்டை தலைமையில் அதிமுக செயல்பட்டுவந்தது.

பின்னர் அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மோதலை அடுத்து, அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என நடந்த போராட்டத்தை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில்,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்தே நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

eps

இந்த வழக்கு குறித்த தீர்ப்பு இன்று வெளியானது, சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடத் தடையில்லை எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டதோடு, அப்போது, அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் அணிந்திருப்பது போன்ற தொப்பியையும், கண்ணாடியையும் தொண்டர்கள் மாட்டிவிட, எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் அதனை அணிந்துகொண்டார். இதுகுறித்து புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.