மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#PleaseHelp: இந்த குழந்தையை பார்த்திருக்கீங்களா?.. கொஞ்சம் பகிரங்க., அம்மாவை சென்றடைய உதவும்..!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரியாண்டிபாளையம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் 3 வயது ஆண் குழந்தை மீட்கப்பட்டது. இதனையடுத்து, காவல் துறையினரால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை அனுமதி செய்யப்பட்டது.
குழந்தை ஈரோட்டில் உள்ள ஹல்பிங் கார்ட்ஸ் (Halbing Hearts) தத்து மையத்தில் வருவாய் துறையினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குழந்தைக்கு உரிமை கூறுவோர் உரிய ஆவணத்துடன் 4 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குழந்தையை யாரும் உரிமை கோராத பட்சத்தில் பிற்காலத்தில் அரசின் சட்டப்படி தத்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை தொடர்பான விபரத்தை பெற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 0421 2971198, ஈரோடு தத்து மைய அலுவலகம் 97906 13262, 99448 39573 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.