மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எனக்கு வாழ பிடிக்கவில்லைப்பா" - 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி, தந்தை கண்முன் தற்கொலை...!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம், குமரன்கோவில் வீதியை சேர்ந்தவர் ரவி. இவர் மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் தமிழ் அமுது (வயது 15), மகன் தமிழ்வாணன். தமிழ் அமுது அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று பயின்று வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த தமிழ் அமுது, அளவுக்கு அதிகமான மாத்திரையை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனைகவனித்த ரவி மகளிடம் என்னவென்று கேட்கவே, "எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் மாத்திரையை சாப்பிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
ரவி தனது மகளிடம் விசாரித்துக்கொண்டு இருக்கும்போதே, வீட்டின் பின்புறம் ஓடிச்சென்ற தமிழ் அமுது, அங்கிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து அலறித்துடித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரவி நீரை ஊற்றி மகளை மீட்ட நிலையில், படுகாயத்துடன் அவசர ஊர்தி மூலமாக டி.என் பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தார்.
அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தமிழ் அமுது கோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பங்களாபுதூர் காவல் துறையினர், தமிழ் அமுதின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.