மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவையில் பரபரப்பு.. பொறியியல் கல்லூரி மாணவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நிர்வாணப்படுத்தி அட்டூழியம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.
இந்த மாணவர் ஓரின சேர்க்கையாளர்களுக்கான செயலி ஒன்றை தனது மொபைலில் பதிவேற்றம் செய்துள்ளார். பின்னர் அதிலிருந்து அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த செயலியின் மூலம் அறிமுகமான வாலிபர் ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என்று கூறி அவரை தனியாக ஒரு இடத்திற்கு வர சொல்லி இருக்கிறார்.
இதனையடுத்து அந்த மாணவர் சரவணம்பட்டி பூந்தோட்டம் நகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த செயலியின் மூலம் அறிமுகமான வாலிபர் அங்கு வந்து மாணவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். பின்னர் திடீரென்று மேலும் 3 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் நால்வரும் சேர்ந்து அந்த மாணவரை தாக்கி ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி உள்ளனர்.
பின்னர் அந்த மாணவனின் செல்போனை பறித்த அந்த கும்பலானது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 11 ஆயிரத்தை தங்களது கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர். இதனையடுத்து மாணவனின் செல்போனை பறித்துக் கொண்ட அந்த கும்பலானது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் உடல் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மாணவர் இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.