மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பமாகியதால், அந்த குழந்தை 21 வயதாகும் வரை மாதம் 10,000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த ராக்கு என்பவரின் மனைவி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், அவர் மீண்டும் கர்ப்பமாகியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பில் மனுதாரருக்கு பிறக்க போகும் குழந்தைக்கு தேவையான கல்வி மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும் எனவும் குழந்தைக்கு 21 வயது நிறைவடையும் வரை மாத மாதம் பத்தாயிரம் ரூபாய் அரசு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.