இப்படி ஒரு சோகம் எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது !! ஆசையாக மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சென்ற தந்தை.. நீரில் மூழ்கி இருவரும் உயிரிழப்பு..



Father and son dead after dumbed in well near Thirupathur

தந்தை, மகன் இருவரும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரது 8 வயது மகன் ஜெகதீஷ். ஜெகதீசுக்கு நீச்சல் தெரியாது என்பதால் அவரது தந்தை பாலாஜி, தனது மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அருகில் இருந்த கிணற்றுக்கு அழைத்துசென்றுள்ளார்.

பிளாஸ்டிக் டப்பாவை மகனின் பின்னால் கட்டிவிட்டு அவரை கிணற்றில் இறக்கியுள்ளார் பாலாஜி. இந்நிலையில் மகனின் மீது கட்டியிருந்த கயிறு திடிரென அவிழ்ந்தநிலையில், மகன் கிணற்றுக்குள் தத்தளிப்பதைக் கண்ட பாலாஜி, மகனை காப்பாற்ற கிணற்றுக்குள் வேகமாக குதித்துள்ளார்.

அப்போது அவரும் கிணற்றில் இருந்த சேற்றில் சிக்கியதால் அவரால் வெளிய வர முடியவில்லை. இந்நிலையில் தந்தை மகன் இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் அந்த பகுதியாக வந்த மக்கள் தந்தை மகன் இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவமானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.