மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டின் கொல்லைப்புறத்தை சுத்தம் செய்த 70 வயது மூதாட்டிக்கு நிகழ்ந்த அசம்பாவிதம்...
மயிலாடுதுறையில் பயனற்று கிடந்த கழிவு நீர் தொட்டிக்குள் 70 வயது மூதாட்டி விழுந்த நிலையில் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மயிலாடுதுறை காந்தி நகரை சேர்ந்தவர் நிர்மலா. 70 வயதான இவர் தனது வீட்டின் கொல்லை புறத்தை சுத்தம் செய்து வந்துள்ளார். அப்போது அங்கு பயனற்று கிடந்த கழிவு நீர் தொட்டியின் மீது ஏறி சுத்தம் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தொட்டி மூடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் உடைந்ததில் மூதாட்டி தொட்டிக்குள் விழுந்துள்ளார். பின்னர் மூதாட்டி கூச்சலிட்ட சத்தத்தை கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மூதாட்டியை கயிறு கட்டி பத்திரமாக மீட்டுள்ளனர்.