தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு! எதற்கெல்லாம் அனுமதி?
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பலகட்டங்களாக ஊரடங்கை நீடித்து வருகின்றனர். தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னைக்கு மட்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் தனியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவுகளை பார்சல் வழங்கலாம். காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கலாம். டாக்சிகளில் ஓட்டுனர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். அதேபோல் சைக்கிள் ரிக்ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது.
சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் ஏ.சி. போடாமல் செயல்படலாம், மீன் கடைகள், கோழிக்கறி மற்றும் இறைச்சி கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கலாம். கோவில்கள் அடுத்த உத்தரவு வரும் வரை திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.