மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏழாம் வகுப்பு படிக்கும் மகளை கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை கைது...!
13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால், சிறுமியின் தாய் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் விமல் (35) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
வளர்ப்பு தந்தையான விமல், சிறுமியின் தாய் கூலி வேலைக்கு சென்றுவிடும் நேரத்தில், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். எவே இதை எதையும் சிறுமி தன் தாயிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் விமல், சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக, சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது தாய் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது, வளர்ப்புத் தந்தையான விமல் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, 13 வயது சிறுமியை பாலியல் வன்கோடுமை செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை விமலை கைது செய்தனர்.