மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் பலாத்காரம்.. அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்!
மத்திய பிரதேசம் மாநிலம் ரோவாவில் 23 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மண்டபம் பார்த்து உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கிய வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் டிசம்பர் இரண்டாம் தேதி மணப்பெண்ணின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சத்தில் இருந்த மணப்பெண் சோகத்தில் இருந்து உள்ளார்.
தனது மகள் சோகத்தில் இருப்பதை கண்ட தாயார் வற்புறுத்தி கேட்டுள்ளார். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து திருமண வீடு கலவரமான நிலையில், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
இந்த சம்பவம் நடந்த ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், அந்த பெண்ணின் குடும்பத்தினர் தற்போது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.