மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு! வெறிச்சோடிய தமிழகம்!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோளை விடுத்து வருகிறது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
தேவையின்றி சாலைகளில் சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மதுரை, திருச்சி, தஞ்சாவூர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.