மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலீஸ் ஸ்டேஷனில் பெண் வழக்கறிஞரை தாக்கியவர் கைது: மனைவிக்கு ஆதரவாக ஆஜரானதால் ஆத்திரம்..!
மதுரை பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்-ஆதி சுகன்யா தம்பதியினர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர். ஆதி சுகன்யா தனது கணவர் கார்த்திக் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், அந்த புகார் குறித்த விசாரணைக்காக மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆதி சுகன்யா மற்றும் அவரது கணவர் கார்த்திக் இருவரும் ஆஜராகி உள்ளனர். ஆதி சுகன்யாவுக்கு ஆதரவாக அவரது தரப்பில் மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் நீதி மலர் என்பவர் ஆஜராகியுள்ளார்.
காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த பின்பு அனைவரும் வெளியேறிய நிலையில், கார்த்திக் வழக்கறிஞர் நீதி மலரை ஆபாச வார்த்தையில் திட்டியுள்ளார். இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நீதி மலருக்கு ஆதரவாக அவரது உதவியாளரான வழக்கறிஞர் சாகுல் என்பவர் கார்த்திக்கை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தாயார், நீதி மலர் மற்றும் அவருடன் இருந்த வழக்கறிஞர் சாகுல் ஆகிய இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வழக்கறிஞர் நீதி மலர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் நீதி மலர் சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் கார்த்திக் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.