மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நூடுல்ஸ் சாப்பிட்டுகொண்டே இளம்பெண் செய்த காரியம்.! சற்றுநேரத்திலேயே மயங்கிவிழுந்து நேர்ந்த விபரீதம்!!
சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள காம்ப்ளக்ஸ் ஒன்றில் தி ராயல் ஹெல்த் ஸ்பா என்ற மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு மிசோரம் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். மேலும் அவர்கள் அனைவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுடன் மிசோரமை சேர்ந்த எஸ்தர் என்ற 28 வயதான இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை வேலைமுடிந்து வீட்டிற்கு செல்லும்போது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் டப்பா ஒன்றை வாங்கி கொண்டு சென்றுள்ளார். மேலும் அவர் பகாரடி ரம் குடித்து விட்டு அந்த நூடுல்சை சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றுள்ளார்.
இந்நிலையில் மறுநாள் காலை அனைவரும் தூங்கி எழுந்த நிலையில் எஸ்டர் மட்டும் அப்படியே படுத்துக் கிடந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெண்கள் அவரை எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் பேச்சு மூச்சின்றி சடலமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து மசாஜ் சென்டர் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எஸ்தரின் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர் நூடுல்ஸ் சாப்பிட்டு பகார்டி ரம் குடித்ததால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.