மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மகளின் இறப்பிற்கு மருத்துவர்கள் தான் காரணம்"... கதறி அழுத தந்தையால் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்...!
சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால், உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே முத்தனாங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜெயகிருஷ்ணன். இவரது மகள் சாக்க்ஷி.
இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட காரணத்தால், வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு ஏதும் பாதிப்பில்லை என்று மருந்து மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனை நம்பி பெற்றோரும் சிறுமியை வீட்டிற்கு அழைத்து வர, சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி கீழே விழுந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ ஊர்தி இல்லாததால், தனியார் மருத்துவ ஊர்தியில் அழைத்து சென்றுள்ளனர்.
இதனால் சிறுமி பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 'தன் மகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால், அவர் உயிரிழந்துள்ளார்' எனக்கூறி கதறி அழுதுள்ளார்.
மேலும், "தனது மகளின் இறப்பிற்கு மருத்துவர்கள் தான் காரணம்" என்று ஜெயகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.