மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண ஆசைகாட்டி, மாணவியை கர்ப்பமாகிய ஓட்டுநர்.. பெற்றோரின் சந்தேகத்தால் அம்பலமான உண்மை.!
பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு திருமண ஆசை காட்டி 3 மாதம் கர்ப்பமாக்கிய கொடூரன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியை அடுத்த பள்ளிபாளையத்தை சேர்ந்த மாணவி 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் உடல் நிலையில், மாற்றங்களை அறிந்த அவரது பெற்றோர் சந்தேகம் ஏற்பட்டு மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனையில் மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த விஷயம் தொடர்பாக மாணவியிடம் விசாரித்த நிலையில், வளையபாளையம் பகுதியைச் சேர்ந்த மகிழுந்து ஓட்டுநர் சுப்பிரமணி என்பவர் சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி, மூன்று மாத கர்ப்பமாக்கியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பல்லடம் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி மற்றும் மாவட்ட குழந்தை நல அலுவலர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வளையபாளையம் பகுதியில் வசித்து வந்த கார் ஓட்டுனர் சுப்பிரமணி என்ற இளைஞர் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் இளைஞரை கைது செய்தனர். மேலும், கர்ப்பமாகிய மாணவியை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.