"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
காதலனின் காமபசிக்கு இரையாகி கர்ப்பமான காதலி.. "செத்துப் போ" என்று விரட்டிய காதலனின் குடும்பம்.. மாணவி எடுத்த விபரீத முடிவு..!
மயிலாடுதுறை மாவட்டம் பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாவதி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
இதனையடுத்து ஆனந்தராஜ் பிரபாவதியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதால் அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் பிரபாவதி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து தான் கர்ப்பமாகி உள்ளதை அறிந்த பிரபாவதி ஆனந்தராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் ஆனந்தராஜ் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பதறி போன பிரபாவதி ஆனந்தராஜ் குடும்பத்தினரிம் சென்று முறையிட்டுள்ளார். அப்போது ஆனந்தராஜ் அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோர் பிரபாவதியை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் "செத்துப் போ' என்று கூறி விரட்டியடித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த பிரபாவதி தனது இறப்பிற்கு காரணம் ஆனந்தராஜ் அவரது அண்ணன் அலெக்சாண்டர் மற்றும் அவரது அண்ணி ரஞ்சனி என்று குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரபாவதியின் தற்கொலைக்கு காரணமான ஆனந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.