மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிரிபிள்ஸ் சென்றவர்களை போட்டோ எடுத்த இளைஞர்.! வெளுத்து வாங்கிய பெண்கள்..! அடையாறில் அட்ராசிட்டி.!
சென்னை, அடையாறு எம் ஜி ஆர் ஜானகி கல்லூரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மூன்று பெண்கள் ஒரே வாகனத்தில் பயணம் செய்து வருவதை பார்த்த போலீஸ், அவர்களை அழைத்து விளக்கம் கேட்டதற்கு, உடல்நிலை சரியில்லை என்று கூறி வேகமாக அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார். அவர்களுடன் அவரது ஆண் நண்பர் ஒருவரும் சென்றுள்ளார்.
இந்த நிலையில், அங்கே கடை ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த அருண் என்பவர் அந்த மூன்று பெண்களையும் வண்டியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அந்த பெண்களில் இருவர் பார்த்துவிட, இறங்கி வந்து அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் பொது இடம் என்றும் பாராமல், செருப்பை கழற்றி அடித்துள்ளார்.
இதில், ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் மகள் என்று தெரிகிறது. அவர் அடிக்கும் போது உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு பெருநகர காவல் துறையிடம் புகாராக தெரிவித்துள்ளார்.
தன்னை தாக்கியவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை தக்க ஆதாரங்களுடன் பதிவிட்டதால், சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வைத்துள்ளார்கள்.