மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை மேலும் சரிவு..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது.
உலகளவில் தங்கம் பயன்பாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சாதாரண குடும்பம் தொடங்கி பெரிய பணக்காரர்கள் வரை வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அங்கு தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்நிலையில் சமீப காலமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,502 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,016 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,861 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,888 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.