ஓடுங்க.. ஓடுங்க... அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! குஷியில் இல்லத்தரசிகள்.!



gold rate reduced

சமீப காலமாக  தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தமிழகத்தில் கடந்த கடந்த 1ஆம் தேதியிலிருந்து ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்ததால் இல்லத்தரசிகள் வேதனையடைந்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 65 ரூபாயும், சவரனுக்கு 520 ரூபாயும் அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,805க்கும், சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று  22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 குறைந்து, ரூ4,740 ஆகவும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.62.50க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.2000 குறைந்து ரூ.62,500க்கும் விற்கப்படுகிறது.