மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கம் வாங்க சரியான நேரம்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தை மாதம் தொடங்கிவிட்டாலே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் திருமணம் என்றாலே அங்கு தங்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்நிலையில் தற்போது நிலவிவரும் தங்கத்தின் விலை உயர்வு ஏழை எளிய மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு சற்று மகிழ்ச்சித்தரும் விதமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 4 ஆயிரத்து 656 க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தநிலையில், இன்று ஒரு கிராமிற்கு 48 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல் சவரனுக்கு 384 ரூபாய் குறைத்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று 36 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்பனையாகிறது.