மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.! குஷியில் இல்லத்தரசிகள்.!
தமிழகத்தில் சாதாரண குடும்பம் தொடங்கி பெரிய பணக்காரர்கள் வரை வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அங்கு தங்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. கொரோனா பரவல் காரணமாக பல குடும்பங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக முகூர்த்த நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்தநிலையில் பல முகூர்த்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதிலும், ஆவணி மாதத்தில் அதிகப்படியான முகூர்த்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் காரணமாக ஆவணி மாதத்தில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. இந்தநிலையில் ஆவணி மாதம் நேற்றுடன் நிறைவுபெற்று இன்று புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. இதன்மூலம் தங்கம் ஒரு சவரன் ரூ.35,000-க்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ. 50 குறைந்து, ரூ.4,365 க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.34,920க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி, ஒரு கிராம் ரூ.1.50 குறைந்து, ரூ.65.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.