மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு; காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க தயார்
கலைஞரை அடக்கம் செய்ய மரீனாவில் இடம் ஒதுக்க வேண்டி திமுகவினர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு சென்னையில் உள்ள சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என அறிவித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்தாள் அவரை அடக்கம் செய்ய சென்னை மரீனா கடற்கரையில் நிச்சயம் இடம் ஒதுக்கப்படும் என திமுகவினர் அதிகம் நம்பிக்கையுடன் இருந்தனர்.
கலைஞரின் உடல் அவரது அரசியல் குருவான அறிஞர் அண்ணா நினைவகம் அருகே தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அணைத்து திமுகவினரின் விருப்பம். இதை நிறைவேற்றும் வகையில் திமுக MLAக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அனுமதி கோரினர். அதற்கு முதல்வர் "பாப்போம்" என பதிலளித்து அனுப்பியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விளியிட்டுள்ள அறிக்கையில், மரியா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே கலைஞரை அங்கே அடக்கம் செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
அதற்கு பதிலாக சென்னையில் உள்ள சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என அறிவித்துள்ளது.
இதனை கேட்டு திமுகவினர் மேலும் வருத்தத்தில் உள்ளனர்.