மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படுபாதகன்.... 16 சிறுமிகளை கதற கதற வன்கொடுமை.... கழுதை மேல் ஏற்றிய ஊர் மக்கள்!
தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் அவரது கிராமத்தில் இருக்கும் 16 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அவரை மொட்டை அடித்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சார்ந்தவர் வையாபுரி. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீடும் பெட்டிக்கடையோடு சேர்ந்தே உள்ளது. இந்நிலையில் இவரது பெட்டி கடைக்கு தின்பண்டங்கள் வாங்க ஈஸ்வரி என்ற சிறுமியை வந்திருக்கிறாள். சிறுமிக்கு தின்பண்டங்களை கொடுத்து அவரிடம் நைசாக பேசி வீட்டிற்கு அழைத்துச் சென்ற வையாபுரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்று சிறுமி உணவு எதுவும் சாப்பிடாமல் அழுது கொண்டே படுத்து இருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சிறுமியிடம் கேட்டபோது நடந்த விபரங்களை கூறிய அழுதுள்ளார். அதன்பிறகு அவரது தந்தை வந்ததும் சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் ஊர் காரர்கள் கூட்டமாக சேர்ந்து சென்று வையாபுரியின் கடையை அடைத்து உடைத்திருக்கிறார்கள். மேலும் அவரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
ஈஸ்வரி மட்டுமல்லாமல் அப்பகுதியில் இருக்கும் 16 சிறுமிகளுக்கு இதுபோன்று பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்திருக்கிறது . இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அவருக்கு மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குற்றவாளி வையாபுரியை பொது மக்களிடம் இருந்து மீட்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.