தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி! மருத்துவமனையில் அனுமதி!



health-secretary-radhakrishnan-family-members-affected

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் அசுர வேகத்தில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
மேலும் இத்தகைய கொடிய வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்திலும் இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாமானியர்கள் முதல் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். 

 மேலும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளது. 

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று எனது மாமனார் நாகராஜனுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களது நெருங்கிய உறவினர்களான நான், எனது மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த் ஆகியோர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அதில் எனது மகன் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அரசு கிங் இன்ஸ்டிடியூட் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.