பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
மக்களே இனிய செய்தி! சென்னையில் கொட்டித் தீர்க்க போகும் மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்.!
கடந்த ஒரு வருடமாகவே மழையே இல்லாமல் மிகவும் வறண்ட நிலையில் சென்னை காணப்படுகிறது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து ஏரிகளும் நீரின்றி வறண்டு போயின. இதனால் சென்னையில் வாழும் மக்கள் குடிநீருக்காகவும் தங்களது அன்றாட தேவைகளுக்காகவும் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 80 சதவிகிதத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் உள்ள ஆழ்துளாய் கிணறுகிளிலும் நீர் இல்லாமல் வறண்டு போயின. இதனால் மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக பல ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று சற்று வலுவடைந்து சென்னையில் கிண்டி, அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், பெரம்பூர், ஆவடி, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வெப்பமான சூழலை சற்றே தணித்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல் நார்வே வானிலை ஆய்வு மையம், சென்னையின் வானிலை நிலவரத்தை கணித்துள்ளது. அதன்படி, அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். அதுவும் மாலை நேரங்களில் மழை வெளுத்து வாங்கி, நள்ளிரவு வரை தொடரும்.
அதன்பிறகு படிப்படியாக மழையின் அளவு குறையும். குறிப்பாக இன்று இரவு பெருமழை கொட்டப் போகிறது என்று தெரிவித்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் தங்களது நீர் பற்றாக்குறை குறையும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர்.