மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்துகட்டவிருக்கும் கனமழை! குதூகலத்தில் தமிழக மக்கள்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவக் காற்று முடிவடைந்த நிலையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆனதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக்கடல் - தென் தமிழகத்தை ஒட்டிய பகுதிகலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சென்னையில் நேற்று மாலை முதலே வானம் இருண்டு காணப்பட்ட நிலையில் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என தகவல்கள் வெளியானதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.