மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் வெளுத்துக் கட்டப் போகும் கனமழை! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!
வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கன மழை முதல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.