அடக்கொடுமையே! இப்படி ஒரு சாவா.. நண்பர்களுடன் பைக்கில் சென்ற இன்ஜினியரிங் மாணவருக்கு நேர்ந்த துயரம்..!



humility-such-a-death-tragedy-happened-to-an-engineerin

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஆந்திராவை சேர்ந்த வினை குமார் என்பவர் 4ம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்று விட்டு மீண்டும் தங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு செல்வதற்காக திரும்பி உள்ளனர். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனத்தில் அவர்கள் மூவரும் வந்துள்ளனர்.

engineering student

இதனையடுத்து பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வினை குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வினை குமாரின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த வினை குமார் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்களான ரேவனு, திவ்யதேஜாவு ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது இடி தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.