மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே!! பைக்கில் சென்ற இளைஞரின் தலை வெட்டப்பட்ட சம்பவம்... தலைமறைவான மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கண்களில் மிளகாய் தூளை தூவி தலையை வெட்டி கொலை செய்து அந்த தலையை மர்ம நபர்கள் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் அப்பகுதியில் தலை இல்லாத உடல் ஒன்று கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அடையாளம் தெரியாத இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.