மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே!! மது போதையில் நண்பர் என்றும் கூட பார்க்காமல் கொலை செய்த இளைஞர்.. நாகையில் பரபரப்பு..!
நாகை மாவட்டத்தில் குடிபோதையில் தனது நண்பரை பட்டாக்கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகையில் எரவாஞ்சேரியை சேர்ந்த கிருஷ்ணராஜும், ஆலியூரை சேர்ந்த நவீனம் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் பூலாங்குடி பேருந்து நிறுத்தம் அருகே மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணராஜ் நவீன்னிடம் தான் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது தாய் மற்றும் சகோதரரிடம் சென்று தவறாக பேசியதை குறித்து தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜ் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியை கொண்டு நவீனை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்