மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலனை ஆசையாக அழைத்த மனைவி.. கணவன் செய்த கொடூர செயல்!
செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் ரெட்டி குப்பம் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். கராத்தே மாஸ்டர் ஆன இவர் கடந்த மார்ச் 13ஆம் தேதி காணாமல் போனார். இந்த நிலையில் தாழம்பூர் அன்னை நகரில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் லோகநாதனின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சிகளும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், லோகநாதன் கடைசியாக செல்போனில் பேசிய தாழம்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி கஸ்தூரி என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், கஸ்தூரி, அவரது கணவர் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகியோர் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் கஸ்தூரி, அவரது கணவர் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை கைது செய்தனர். மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ், இறந்த லோகநாதன் நடத்திய யோகா பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் சுரேஷின் மனைவி கஸ்தூரி, லோகநாதனிடம் பழகியுள்ளார்.
இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த சுரேஷ் தனது மனைவி கஸ்தூரியை கண்டித்து, அவரது மனதை மாற்றியுள்ளார். இதனையடுத்து லோகநாதனை கொலை செய்ய திட்டமிட்ட சுரேஷ், கஸ்தூரி மூலம் லோகநாதனை, தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து சுரேஷ் வீட்டிற்கு வந்த லோகநாதனை, சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அடித்து கொலை செய்து, கிணற்றில் சடலத்தை வீசியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் இதுவரை தேடி வருகின்றனர்.