குழந்தைகளை அனாதையாக தவிக்கவிட்டு தாயும், தந்தையும் செய்த அதிர்ச்சி செயல் ,வெளியான மனதை உறையவைக்கும் பகீர் சம்பவம்!



husband commits suicide after wife dead

மனைவி இறந்த சோகம்  தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த  கணவன் தனது குழந்தைகளை அனாதையாக தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்  குணபாலன்.இவரது மனைவி  ஜெயபாரதி .கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜெயபாரதியை குணபாலன் சிகிச்சைக்காக பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவரது நோய் சரியாகவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜெயபாரதி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதனால் மனமுடைந்து தனிமையில் அவதிப்பட்டு வந்த 
குணபாலன் மனவேதனையில் தற்கொலை செய்துகொள்வதற்காக  எலி மருந்தை சாப்பிட்டுள்ளார் . இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் குணபாலன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவ்வாறு தாயும் தந்தையும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததால் 2 ஆண்குழந்தைகளும் அனாதையாக  தவித்து நிற்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.