மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போனில் பிஸியாக இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த சம்பவம்!
தேனி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மகாராஜன்-பிரியங்கா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே மகாராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதில், வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
ஆனால், தினமும் தனது மனைவியிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இது நிலையில் கடந்த சில மாதங்களாக மகாராஜன் கால் செய்யும் போதெல்லாம் பிரியங்காவின் செல் போன் பிசி பிசி என்று வந்துள்ளது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபொழுது தன்னுடைய தோழியிடம் பேசிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் மகாராஜனுக்கு தனது மனைவி பிரியங்கா மீது சந்தேகம் வர தொடங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த மகாராஜன் பிரியங்காவை சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்று ஆத்திரம் அடைந்த மகாராஜன் மனைவி பிரியங்காவை கடுமையாக தாக்கி அவருடைய கழுத்தை நெறித்துள்ளார். இதில் பிரியங்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மகாராஜன் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக போலீசில் சரணடைந்துள்ளார். சந்தேக புத்தியால் ஒரு குடும்பமே சிதைந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.