மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன்! சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி!
சென்னை அயனாவரம் பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் துர்கா. இவருக்கும், சார்லஸ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு துர்காவிற்கு திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும், திருமணம் செய்து கொண்டு, சென்னை அயனாவரத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்போது விஜயபாரதி, அடிக்கடி பணம் கேட்டு துர்காவைத் துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தரவில்லை என்றால் உனது ஆபாசப் புகைப்படத்தை வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா விஜயபாரதியிடம் சண்டை போட்டுக்கொண்டு அவரின் அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனாலும், தொலைப்பேசி மூலம், தொடர்புகொண்டு துர்காவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், துர்காவின் நிர்வாணப் புகைப்படத்தை முகநூலில் விஜயபாரதி வெளியிட்டுள்ளார். இதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த துர்கா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து துர்காவின் உறவினர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலிசார் கையும் களவுமாக விஜயபாரதியை பிடித்து, மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது, முகநூலில் நிர்வாணப் படத்தை வெளியிட்டது போன்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.