காதலிக்க நான் வேண்டும்.. கல்யாணம் பண்ணிக்க இன்னொருத்தியா.. கல்யாண வீட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!



i-want-to-fall-in-love-another-one-to-get-married-the-s

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரரான சுபின். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பட்டதாரி பெண்ணுக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இணைய வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சுபின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வரவே சுபினின் காதலுக்கு எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். மேலும் சுபினுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

Cheating boy friend

இதற்கிடையில் இந்த தகவலை அறிந்து கொண்ட சுபினின் முன்னாள் காதலி காவல் நிலையம் சென்று தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் சுபின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார் ராணுவ வீரரான சுபின் மீது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி நம்பிக்கை மோசடி செய்தது மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள சுபினை தேடி வருகின்றனர்.