மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 வருட காதல்.. கணவனை பிரிந்து காதலுடன் சேர்ந்து மனைவி செய்த செயல்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரண்மனை குதிரை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு தேன்மொழிக்கு கோவையை சேர்ந்த முரளி என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகும் தனது காதலை மறக்க முடியாத தேன்மொழி, மணிகண்டனை செல்போனில் பேசிக்கொண்டே தனது காதலை வளர்த்து வந்துள்ளார்.
இதனையறிந்த கணவர் தனது மனைவி தேன்மொழியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் 17ஆம் தேதி தேன்மொழி, தனது கணவரிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனிடையே தனது காதலன் மணிகண்டனை கோவைக்கு வரச் சொல்லி அவருடன் பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளார். இதனையடுத்து காதலில் ஒன்று சேர முடியாத வேதனையில் இருவரும் நேற்று இரவு சென்னை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.