மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
25 வயது இளைஞரின் தலையில் அம்மிக்கல் போட்டுக்கொலை; மனைவியின் கண்முன் பீறிட்ட ரத்தம்.! அலறவைக்கும் சம்பவம்.!
சென்னையில் உள்ள பெரும்பாக்கம், எழில் நகரில் வசித்து வருபவர் கலைவாணன் (வயது 25). இவரின் மனைவி சௌந்தர்யா (வயது 25). கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலைவாணன் வீட்டிற்கு போதையில் வந்த நிலையில், குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணவரை சௌந்தர்யா வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் வீட்டின் வாசலிலேயே உறங்கி இருக்கிறார்.
இதனிடையே, மறுநாள் அதிகாலையில் அவரின் தலையில் மர்ம நபர் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த மனைவி, கதவை திறந்து பார்த்தபோது கணவரின் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டு வெளியேறி வருவதை கண்டு அலறியிருக்கிறார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் மனைவியின் கண்முன்னே உயிர் பிரிந்தது.
இதையும் படிங்க: சொத்து தகராறு... அண்ணனின் ஆணுறுப்பை அட்டாக் செய்த தம்பி.!! வினோத சம்பவம்.!!
அம்மாவை திட்டியதால் கொன்று பழிதீர்த்த மகன்?
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பெரும்பாக்கம் காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், கலைவாணன், அதே பகுதியை சேர்ந்த வசந்த் (வயது 21) என்பவரின் அம்மாவுடன் தகராறு செய்து தகாத வார்த்தையில் திட்டியதாக தெரியவருகிறது. இதனால் வசந்த் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று தனது நண்பர்கள் தமிழ், சந்தோஷ், அருண் ஆகியோருடன் சேர்ந்து வசந்த் கலைவாணனின் தலையில் அம்மிக்கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் அனைவரும் தலைமறைவாகவே, அவர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். கலைவாணன் கடந்த சில மாதமாகவே கஞ்சா விற்பனை செய்வோர் குறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கும் உளவாளியாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பயங்கரம்... இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.!! 5 நபர்களுக்கு வலைவீச்சு.!!