வீட்டு வாசலில் இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போதையில் துணிகரம்.!



in Chennai Puliantope 13 Year Old Girl Sexually Harassed 

 

சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் 38 வயதுடைய பெண்மணி, அரசு மருத்துவமனை ஒன்றில் தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 18, 13 வயதுடைய 2 மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினத்தில் இரண்டாவது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என வீட்டில் இருந்துள்ளார். 

வீட்டுக்குள் அழைத்து அதிர்ச்சி செயல்

காலை சுமார் 11 மணியளவில், பெண்ணின் வீட்டில் எதிர்புறம் வசித்து வரும் வேறொரு பெண்ணின் வீட்டிற்கு, இளையராஜா என்பவர் வருகை தந்துள்ளார். அவர்களின் வீட்டு வாசலில் மேற்கூறிய பெண்ணின் 13 வயது மகள் அமர்ந்து இருக்க, சிறுமியை பேசி வீட்டிற்குள் அழைத்துச் சென்றவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: உல்லாசத்துக்குத்தான் நீ., குடும்பத்துக்கு அவ.. கள்ளக்காதலியை திருமணம் செய்ய மறுத்த நபர்.. பெண் குமுறல்.!

பாலியல் தொல்லை

இதனால் பதறிப்போன சிறுமி அலறவே, விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் இளையராஜாவை அங்கிருந்து துரதியடித்தனர். மேலும், சிறுமியின் தாய் அப்போது வீட்டில் இல்லாத நிலையில், அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

chennai

போக்ஸோவில் கைது

புகாரை ஏற்ற காவல்துறையினர், கன்னிகாபுரம் தாஸ் நகரில் வசித்து வரும் இளையராஜா (வயது 49) நேபவரை கைது செய்தனர். விசாரணையில், இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளருக்கு கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணம் முடிந்து மனைவி, மகள் இருக்கிறார்கள். இவரின் மேலாளர் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், வேலைக்கு செல்லாமல் போதையில் சுற்றி வந்துள்ளார். அப்போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதனையடுத்து, இளையராஜாவின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல்; சென்னையில் பயங்கரம்.!