ஐ லவ் யு சொல்ல தைரியம் இருக்கா? சிறுமியை ட்ரிக்கர் செய்து வீடியோ; 23 வயது இளைஞர் போக்ஸோவில் கைது..!



  in Dindigul Omegle App Girl Cheating By Man 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழாம் வகுப்பு பயின்று வரும் 14 வயதுடைய மாணவி, அவரின் தோழிகள் ஒன்றாக சேர்ந்து, கடந்த செப்.16ம் தேதி ஓமெகில் (Omegle App) எனப்படும் வீடியோ கால் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். 

ஐ லவ் யு சொல்லு

இந்த செயலி வாயிலாக மாணவி அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடி வந்த நிலையில், மாணவிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், சேலஞ் செய்வதாக கூறி, மாணவியை ஐ லவ் யு என சொல்ல வைத்துள்ளார். பின் இருவரும் உரையாடலை முடித்துக்கொண்டனர். 

இதையும் படிங்க: பள்ளி பருவ காதலை மீண்டும் கனெக்ட் செய்த பெண் ஐடி ஊழியர்.. கற்பழித்து கைவிட்ட காதலன்.!

வீடியோ வைரல்

இதனிடையே, மாணவி ஐ லவ் யு என பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இதனைக்கண்டு சிறுமி & அவரின் பெற்றோர் பதறிப்போன நிலையில், சிறுமியை தொந்தரவு செய்த இளைஞரை தொடர்பு கொண்டு விடியோவை நீக்குமாறு எச்சரித்துள்ளனர். 

23 வயது இளைஞர் கைது

இதனால் விடியோவை சில நாட்கள் நீக்கி வைத்தவர், பின் மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர் ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் வசித்து வரும் தினேஷுராம் (வயது 23) என்பவரை கைது செய்தனர். 

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷை கைது செய்த அதிகாரிகள், அவரை சிறையில் அடைத்தனர். தினேஷ் இதுபோல பல சிறுமிகள், இளம்பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டது உறுதியாகவே, நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னர் தினேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: பல பெண்களிடம் மோசடி திருமணம்; கேடி இளைஞன் கைது.. இறுதி நேரத்தில் பெண்ணை காப்பாற்ற முயன்றும் தோல்வி.!