#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மதுபோதையில் இளைஞர்கள் கும்பலால் முதியவர் வீடு சூறையாடல்; குடிப்பதை தட்டிக்கேட்டதால் கொடூரம்.!
பொதுவெளியில் குடிப்பதை தட்டிக்கேட்ட முதியவரின் வீடு சூறையாடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வசித்து வரும் முதியவர், அங்குள்ள பகுதியில் கூட்டமாக சேர்ந்து மதுபானம் அருந்திய இளைஞர்கள் கும்பலை கண்டித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: சேலம்: ஐயோ.. பார்க்கவே பதறுதே.. தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 50 பேரின் உயிர் தப்பியது..!
குடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்
இதனால் ஆவேசமடைந்த கும்பல், முதியவரை விரட்டி வந்து தாக்கி இருக்கிறது. இதனால் அவர் வீட்டிற்குள் வந்து கதவை பூட்டிக்கொண்ட நிலையில், வீட்டை கும்பல் சூறையாடியது.
சிமெண்ட் ஓடு வீட்டில் அவர் வசித்து வந்த நிலையில், வீட்டின் மேற்கூரை மீது ஏறி, ஓட்டை உடைத்து முதியவரின் மீது தாக்குதல் நடந்துள்ளது. 20 பேர் கும்பலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தாக்கப்பட்டனர்.
கூட்டமாக சேர்ந்து வீடு சூறையாடல்
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேண்டாம் என கதறியும் பலன் இல்லை. பெண் ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டதை தொடர்ந்து, அது வைரலாகி இருக்கிறது.
தற்போது இந்த தாக்குதல் சம்பவத்தில் இருதரப்பும் மோதிக்கொண்டு, 4 பேர் காயமடைந்து இருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பதறவைக்கும் வீடியோ இதோ
ஏய் எங்களையே கேள்வி கேக்குறியா?.... வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து முதியவரை கொடூரமாக தாக்கிய போதை இளைஞர்கள்.. வீடியோ எடுத்த பெண்ணை மிரட்டி அட்டூழியம்..! #Salem | #Attack | pic.twitter.com/nXIcvSs9Nk
— AMVI D SRINIVASA THILAK (@AmviThilak) November 1, 2024
இதையும் படிங்க: சேலம்: 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை.!! விசாரணையில் வெளியான உண்மை.!!