மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருப்பூர்: சொத்துக்காக இப்படியா?.. மாமனாரை தீர்த்துக்கட்டிய மருமகன்.. அரங்கேறிய வெறிச்செயல்.!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், எல்லப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனிச்சாமி (70). இவருக்கு மகன், அம்பிகா என்ற மகள் இருக்கின்றனர். இவருக்கு திருமணம் முடிந்து, கணவர் ராஜ்குமாருடன் வசிக்கிறார். ராஜ்குமார் படியூர் கிராமத்தில் ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு & விற்பனை நிறுவனத்தை நடத்துகிறார்.
மாமனார் கொலை
கடந்த சில ஆண்டுகளாகவே பழனிச்சாமி - ராஜ்குமார் இடையே நிலவி வந்த சொத்துப்பிரச்னையால், இருதரப்பு குடும்பமும் பேசாமல் இருந்து வந்துள்ளது. இதனிடையே, இன்று காலை ராஜ்குமார் தனது மாமனார் பழனிசாமியை துப்பாக்கியால் 5 முறை சுட்டுக்கொன்றார்.
மருமகன் தற்கொலை
பின் அங்கிருந்து தப்பி வந்த ராஜ்குமார், மனைவியிடம் தகவலை தெரிவித்துவிட்டு பின் தானும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து காங்கேயம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். சொத்து விஷயத்தில் நடந்த படுகொலை சம்பவம் அப்பகுதியை பரபரப்பாகி இருக்கிறது.
இதையும் படிங்க: கோவை: ஸ்பீக்கரில் சவுண்ட் வைத்ததால் வந்த வினை; அப்பாவி இளைஞர் கொலை., 5 பேர் கும்பல் வெறிச்செயல்.!
இதையும் படிங்க: #Breaking: 3 வயது சிறுவன் கொடூர கொலை; குடும்ப தகராறில் பெண் வெறிச்செயல்.. நெல்லையில் பயங்கரம்.!