#Breaking: மக்கள் கூட்டம் நடுவே புகுந்த டிரக்; 10 பேர் பரிதாப பலி.! புத்தாண்டு கொண்டாட்டத்தில் துயரம்.!



in-us-new-orleans-truck-rammed-into-crowd-10-dies

 

அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தின் மிகப்பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ் (New Orleans). புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக அங்குள்ள நகர வீதிகளில் நேற்று மக்கள் அதிகம் கூடி இருந்தனர். குறிப்பாக இபர்வில்லே பகுதியில் இருக்கும் போர்பன் தெரு பகுதியில் சாலையில் மக்கள் இருந்தனர். 

டிராக் மோதி சோகம்

அச்சமயம் கனரக டிரக் ஒன்று திடீரென மக்கள் கூட்டத்திற்கு புகுந்தது. இந்த சம்பவத்தில் சாலையில் இருந்தவர்கள் மீது நேரடியாக டிரக் மோதி விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், பலரும் படுகாயமடைந்து உயிருக்கு துடிதுடித்தனர்.

இதையும் படிங்க: அம்மா, 4 தங்கையை அறுத்துக்கொன்றது ஏன்? 24 வயது இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்..!

 

10 பேர் பலி

நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர், மக்களை மீட்டு பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், முதற்கட்டமாக டிரக் மோதி 10 பேர் பலியானது தெரியவந்தது. டிரக் ஓட்டுனரிடம் விசாரணை நடந்து வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த நபர்களின் மீது டிராக் வைத்து தாக்குதல் நடத்தி, துப்பாக்கிசூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த விஷயம் அரசுத்தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனை விபத்து என்று கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி.. இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய 40 வயது பெண், 4 பேர் கும்பலால் கற்பழிப்பு.!