மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்ணீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுமி மரணம்; வீட்டு வாசலில் நடந்த துயரம்.. பெற்றோர்களே கவனம்.!
வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி, தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், சைனகுண்டா கிராமத்தில் வசித்து வருபவர் விஜயகுமார் (35). இவருக்கு திருமணம் முடிந்து ஜான்சி என்ற மனைவி, 6 வயதுடைய லித்திகா என்ற மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
தவறி விழுந்த சிறுமி
இதனிடையே, சிறுமி சம்பவத்தன்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். அங்கு தண்ணீர் தொட்டி ஒன்றும் இருப்பதாக தெரியவரும் நிலையில், அது திறந்து கிடந்துள்ளது. இதனால் விளையாடிய சிறுமி, தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: விபச்சார விடுதிகளின் கூடாரமாக வேலூர்? சிக்கப்போகும் அரசியல்கட்சி புள்ளிகள், மாமூல் போலீசார்..!
மரணம் உறுதி
சிறுமி அலறிய நிலையில், சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் & அக்கம் பக்கத்தினர், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். சிறுமியை பரிசோதனை செய்த குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதை உறுதி செய்தனர்.
அதிகாரிகள் விசாரணை
இதனால் குடும்பத்தினர் கதறியழுதனர். தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல்துறை அதிகாரிகள், சிறுமி லித்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 வயது மாணவியுடன் உல்லாசம்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கூலித் தொழிலாளி.!!