மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை, மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பமான நிலை மாறி குளிர்ந்த சூழல் நிலவி வருவதால் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாய பெருமக்களும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 12 ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.