மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே சிறுமியை நாசம் செய்த கொடூர சம்பவம்.!
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது 13 வயது சிறுமி உடன் தனியாக வசித்து வருகிறார். அந்த சிறுமி சிக்னலில் பேனா, பென்சில் வாய்ப்பாடு, போன்ற பொருட்களை விற்று உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை காப்பாற்றி வருவதாக கூறப்படுகிறது.
சிறுமியின் பெரியம்மா மகளான ஷாகிதா பானு என்பவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் மதன்குமார் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஷாகிதா பானு தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி சிறுமியின் தாயிடம் அதாவது சித்தியிடம் சிறுமையை உதவிக்கு வீட்டுக்கு அனுப்பமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அக்கா மக்களுக்கு உதவியாக இருக்கட்டும் என சிறுமியை அனுப்பிவைத்துள்ளார் அந்த தாய்.
மீண்டும் வீட்டிற்கு வந்த சிறுமி தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தாயிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல்நிலையத்திற்கு சென்று மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து தனது 13 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தியாவிடம் விசாரணை மேற்கொண்டபோது ராஜேந்திரன் என்பவர் தனக்கு நெருக்கமான நண்பர் என்றும் அவர் பலமுறை இந்த 13 வயது சிறுமி உட்பட பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு தேவை என்று அழைத்துச் செல்வார் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து ராஜேந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் புகழேந்தியை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.