மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடி போதையில், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது...!!
11 வயது சிறுமி தனது தம்பியுடன் கடைக்கு சென்ற போது சாலையில் எதிரே வந்து போதை ஆசாமி சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த கூலித்தொழிலாளி, தனது மனைவி, 11 வயது மகள் மற்றும் மகனுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் வில்லுக்குறியில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். அப்போது அவரது மகள் தனது தம்பியுடன் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
சிறுமியும், அவரது தம்பியும் ரோட்டில் நடந்து சென்றபோது எதிரே வந்த போதையில் இருந்த இளைஞர், அந்த சிறுமியின் கையை பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டு கத்தியுள்ளார். உடனே அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் என்பது தெரிய வந்தது. அந்த இளைஞர் ஜெகதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.