#BREAKING | தமிழ்நாட்டில் நிலடுக்கம்? அதிர்ச்சியில் மக்கள்.!



is-earth-quake-in-tamilnadu-people-in-fear

தமிழ்நாட்டில் இன்று மதியம் நாமக்கல் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால்  பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் உள்ளிட்ட இடங்களில்  இன்று மதியம் 1.21 மணி அளவில்  நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. இதனால் பயந்த மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வந்து சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

tamil nadu

இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களது ஆய்வுக்கு பின்னரே நிலநடுக்கத்தின் தீவிரம் பற்றி தெரியவரும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

tamil nadu

இந்த வருடத்தின் தொடக்கத்தில் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது. அதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.