ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ஆத்தாடி...! கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.28.78 கோடிக்கு சொத்து குவிப்பு.! முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக செயல்பட்டவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரில் கே.சி.வீரமணி வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2016 முதல் 2021 வரை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி பதவியில் இருந்தகாலத்தில் வருமானத்துக்கும் அதிகமாக ரூ.28.78 கோடிக்கு சொத்து குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது.
இதனையடுத்து இவருக்குச் சொந்தமான சொகுசு விடுதி உள்பட 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.